Pages

Friday, 4 November 2016

அகநானூறு Agananuru 382

தலைவி தோழியிடம் சொல்வதைத் 
தொலைவில் தலைவியை அடையக் காத்திருக்கும் தலைவன் கேட்டுக்கொண்டிருக்கிறான்.


1
பிறர் ஒருவர் படும் துன்பத்தை மற்றவர்களும் பகிர்ந்துகொண்டு துன்புறுவர். 

ஆனால் என் துன்பத்தை நான்தானே பட்டுத் தீரவேண்டும். 
அப்படித்தான் நான் துன்பப் பட்டுக்கொண்டிருக்கிறேன்.

வீட்டில் எனக்கு அணங்கு விழா நடத்துகின்றனர். 
கொடியில் முருகப் பொருமானுக்கு உரிய கடப்பம் பூவைக் கண்ணியாகக் கட்டி எனக்கு அணிவித்திருக்கின்றனர். 
மேளதாளத்துடன் பாட்டுப் பாடுகின்றனர். 
அந்தப் பாட்டின் பாணித் தாளத்தோடு நான் ஆடவேண்டும். 

நம்மவர் என்னை இவ்வாறு ஆட்டிப் படைக்கின்றனர் என்பதை அவருக்குக் கூறியாக வேண்டும். 
தோழி! 
என்ன செய்யலாம்? 
இப்படித் தலைவி தோழியை வினவுகிறாள்.
2
கருநிற விரல்களை உடைய மந்தி அருவியில் பாய்ந்து நீராடும். 
நீரில் மிதந்து வரும் பலாப்பழ மிதவையில் ஏறிக்கொண்டு விளையாடும். 

இது மலைச்சாரல் நீர்த்துறையில் நிகழும். 
வறட்சி என்பதையே அறியாத சோலை அது. 
அந்தச் சோலையினை உடைய மலையின் தலைவன் என் காதலன். 

நம்மவர் என்னை அணங்காடச் செய்வதை என் காதலனுக்குச் சொல்லியாக வேண்டும். 

அவன் விரும்பியதை என்னிடம் வந்து சொல்லும் தோழியே! 
அவனிடம் இந்த அணங்காட்டம் பற்றிச் சொல்லியாக  வேண்டும்.
  
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  குறிஞ்சி

1
''பிறர் உறு விழுமம் பிறரும் நோப;
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்;
கடம்பு கொடி யாத்து, கண்ணி சூட்டி,
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம்
காடு கெழு நெடு வேட் பாடு கொளைக்கு ஏற்ப,           5
அணங்கு அயர் வியன் களம் பொலிய, பையத்
தூங்குதல் புரிந்தனர், நமர்'' என, ஆங்கு அவற்கு
அறியக் கூறல் வேண்டும் தோழி!
2
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி
செழுங் கோட் பலவின் பழம் புணையாக,       10
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும்
வறன் உறல் அறியாச் சோலை,
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே!

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது.
கபிலர்

கி.மு. காலத்துப் பாடல்

The man who comes to enjoy his lover hears the conversations between his lover and her friend-maid. 

His lover says to her friend-maid.  

If other man in difficulty, others can console. 

But, I am suffering bearing my own pain. 
My family members arranged for a festival on my part and started a ceremony making me to dance in mad, mistaking me as I am affected by God Murugan. 

They made a garland tying Kadambu flowers with a creeper; and garlanded on my shoulder. 

They play music with bands; and make me dance on rhythm. 
You my friend, we must inform to my lover. 
What shall we do?

He is a man of the mountain where female monkey swims in river floating on jackfruit. 

He must know my difficult position to find out a salvation.


No comments:

Post a Comment