Pages

Friday, 4 November 2016

அகநானூறு Agananuru 381

பொருள் தேடச் செல்லும் வழியில் தலைவியை எண்ணித் தலைவன் கலங்குகிறான்.

1
ஆளி இனத்து ஆண்சிங்கம் மீளி இனத்து யானையின் தலைவன் புலம்பும்படி அதன் கொம்புகளைக் பிடுங்கி, கொம்பின் குருத்தைத் தின்னும் அச்சம் தரும் காட்டில் செல்கிறேன். 

மழைமேகம் இல்லாமல் காற்று அனலாக வீசுகிறது. 
வெயில் நிழலைச் சுழற்றி விழுங்கிவிட்டது. 

இங்கே வாழும் வடுகர் கன்றுகளின் தோலை உடுத்திக்கொண்டு வேட்டை நாயுடன் சென்று வேட்டையாடிய இடங்களில் ஆண் கழுகோடு அதன் இனமும் சேர்ந்து பச்சைக் கறியைக் கொள்ளையடித்துக்கொண்டு மாலைக்கால செவ்வானத்ததில் பறக்கின்றன. 

இத்தகைய காட்டு வெளியில் நான் நீந்திக்கொண்டிருக்கிறேன். 

இப்படிப்பட்ட என் வருத்தத்தைக் காட்டிலும் என்னைப் பிரிந்து தனிமையில் வீட்டில் இருக்கும் என் காதலி பெருந் துன்பத்துடன் வருந்திக்கொண்டிருப்பாளோ?
2
வானவன், பகைவர் கோட்டைகளை அழித்த போர்த்திறம் கொண்ட படையையும், வண்டு மொய்க்கும் பூமாலையும் கொண்டவன். 

அவன் அழித்த பகைவரின் கோட்டை போலப் பாழ்பட்ட மேனியுடன் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருப்பாளோ? அவள் இரங்கத் தக்கவள். 

வண்டுகள் மொய்க்க நீர்ப் பொய்கையில் எதிர் எதிராக மலர்ந்திருக்கும் இரண்டு குவளை மலர்கள் போன்ற கண்களில் பனிக்கண்ணீர் தெறிக்க வருந்திக்கொண்டிருக்காளோ?

அரிமதர் மழைக்கண் – செவ்வரி பரந்து மதமதப்புடன் ஈரம் பட்டிருக்கும் கண்கள்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

1
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருத்து அருந்தும்
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப,
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் 5
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை,
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
வில் சினம் தணிந்த வெருவரு கவலை,
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி,                  10
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து,
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
2
முனை அரண் கடந்த வினை வல் தானை,
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய      15
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல,
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது உயிர்த்து,
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண,
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன்    20
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே!

தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
மதுரை இளங்கௌசிகனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

When the man goes on earning wealth in a distant place thinks about his lover whom he leaves in residence.

A lion of ‘Yali’ family pulls the tusk of a king of the elephant family and eats the inner growing part of the tusk. 

I am passing through such a crucial way. 
The climate is very hot by the sun in this arid track. 
There is no shadow by this route. 

The peoples ‘Vadugar’ wearing the skin of calves go on hunting with their dog; and the male eagle calls its family to eat; and they are flying with the flesh of the hunted dead in the evening. 

My lover in my house is more pathetic than I am in the dreadful forest.

King Vanavan destroyed the forts of enemies. 
As the enemy’s fort is suffering she will be suffering dropping her tears in eyes that looks as joined water-lily flowers in my view.


No comments:

Post a Comment