Pages

Thursday, 3 November 2016

அகநானூறு Agananuru 380

தலைவனை ஏற்றுக்கொள்ளுமாறு தலைவிக்குத் தோழி கூறுகிறாள்.


தேரைத் தொலைவில் நிறுத்திவிட்டுத் தனியே அவன் வந்தான். 
“உங்களுடைய ஊர் எது” என்று கேட்டான். 
நாம் சொல்லவில்லை. 
மெல்ல மெல்ல ஒதுங்கி அன்று போய்விட்டான். 
நேற்று வந்தான். 

அகன்ற இலையை உடைய நாவல் மரத்திலிருந்து பழம் நீர்த்துறையில் விழுந்தது. 
அதனை நண்டு ஒன்று எடுத்துக்கொண்டு சென்று தன் துணைவிக்குக் கொடுத்தது. 
அதனை நமக்குக் காட்டினான். 
“நம் பாங்கும் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று எண்ணிக்கொண்டு விலகிச் சென்றுவிட்டான். 

அங்கே பார், அவன் தேர் தெரிகிறது. 
இன்றும் நாம் அவனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் “அந்த” முடிவினை எடுக்கத் துணிந்துவிடுவான் போலத் தெரிகிறது. 

அவன் பெரிதும் நாணம் உடையவன். 
அதனால் அந்த மணல் மேட்டுக்குப் பின்னால் நான் மறைந்துகொள்கிறேன். 
நீ அவனோடு இருக்கிறாயா? தோழி! நீயே சொல்.

அது – விலகுதல்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  நெய்தல்

தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, ''நும்
ஊர் யாது?'' என்ன, நணி நணி ஒதுங்கி,
முன் நாள் போகிய துறைவன், நெருநை,
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த
கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன்,               5
தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடூஉம்
அலவற் காட்டி, ''நற்பாற்று இது'' என,
நினைந்த நெஞ்சமொடு, நெடிது பெயர்ந்தோனே;
உதுக் காண் தோன்றும், தேரே இன்றும்;
நாம் எதிர் கொள்ளாம் ஆயின், தான் அது  10
துணிகுவன் போலாம்; நாணு மிக உடையன்;
வெண் மணல் நெடுங் கோட்டு மறைகோ?
அம்ம, தோழி! கூறுமதி நீயே.

பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

The friend-maid advises her lady to accept the love request of the man of littoral land.

He stopped his chariot in a distance and came here alone. 
“What is the name of your village?” he asked. 
We did not reply. 
He retreated step by step. 
Yesterday he came. 

He shows us a crab that carries a Naval fruit; and feeds it to its female-mate. 
“We will precede the pattern of life” he wants to indicate us; and returns. 

Today, you see there his chariot. 
If you will not accept him, he may decide ‘other way’ wouldn’t approach furthermore. 

Now I shall hide behind the sand-dune. 
I want you to be with him accepting his love.




No comments:

Post a Comment