Pages

Wednesday, 2 November 2016

அகநானூறு Agananuru 379

மீண்டும் பொருளீட்டச் செல்ல விரும்பும் தன் நெஞ்சுக்குத் தலைவன் சொல்கிறான்.

1
நெஞ்சே, நம்மை நயந்து வாழ்பவள் தன் பழைய அழகினை இழந்து நொந்துகொண்டிருக்க, அதனைத் தெரிந்துகொள்ளாமல், தீதின் பக்கம் சேர்ந்துகொண்டு, இரக்கமே இல்லாமல், வீறாப்போடு, பொருள் ஈட்ட மீண்டும் செல்ல முனைவாய் ஆயின், நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்.
2
திரை விரிந்து அலையும் கடல் நீருடன் மண் திணித்துக் கிடக்கும் இந்த உலகத்தைப் பிறருக்கு வழங்காமல் தானே பகலெல்லாம் நனவில் ஆட்சி செய்தாலும், சூரியன் இரவில் ஆள்வது கனவு போல் நிகழவில்லை பார்த்தாயா. 

அதனால் நீ எண்ணிப்பார். 

மலர் சூடி மணக்கும் முடியும், அணிகலன் பூண்ட தோளும் கொண்ட என் காதலியின் மெய்யோடு என் மெய் புகுந்துகொள்வது போல் கையால் இறுக்கித் தழுவிக்கொள்ளும் இன்பத்தின் மிகுதியை நான் இன்னும் காணவில்லை.
தயங்குறு முடி – தொங்கும் கூந்தல் \ வண்டுகள் சூழ்ந்துவர மலர் சூடிய கூந்தல் \ தோளில் தொங்கி அசையும் கூந்தல்
தோள் – வேலைப்பாடுகள் விளங்கப் பொலிவுறும் அணிகலன் பூண்ட தோள்
ஏற்றொறும் - தழுவுதலை ஏற்கும்போதெல்லாம்
3
நெஞ்சே, பொருள் ஈட்டும் ஆசையோடு, என் சொல்லைக் கடந்து, செல்ல வலியுறுத்துவாயானால், காற்றில் எரியும் தீ பட்டு இலை இல்லாமல் நிற்கும் மரத்தடியில், உழைமான் உடலில் இருக்கும் புள்ளி போலத் தோன்றும் நிழலில் நீ ஓய்ந்திருக்கும்போது, என் காதலியின் மறக்க முடியாத அரிய குணங்கள் நினைவுக்கு வந்து உறுத்தும்போது, அவளைப் பற்றி நினைக்காமல் இருப்பாயா?
4
அங்குமிங்கும் திரிந்து, புலியைக் குத்திக் கறை பட்டிருக்கும் கொம்பு கொண்ட ஆண்யானையை அழைத்து முழங்கும் பெண்யானையின் காலடி பதிந்த வழியில் மெதுவாக நடக்கும்போது உன் நெஞ்சுரம் கெட்டு வருந்துவாயே. 
அப்போது நான் என்ன செய்வேன்?

ஒருத்தல் = ஆண்யானை 
உரம் = நெஞ்சுரம் 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

1
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய,
தெருளாமையின் தீதொடு கெழீஇ,
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து,
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே!
நினையினை ஆயின், எனவ கேண்மதி!        5
2
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை,
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி,
நனவின் இயன்றது ஆயினும், கங்குல்
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால்,
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி,    10
சுவல்மிசை அசைஇய நிலை தயங்குறு முடி
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப,
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு,
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி,
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின் 15
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின்
3
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி,
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு,
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல்,      20
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள்
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர,
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று,
4
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப்
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த        25
நிரம்பா நீள் இடைத் தூங்கி,
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே?

முன் ஒரு காலத்துப் பொருள் முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

The Man intending to go on earning wealth again, says to his mind.

You, my mind, if you are thinking to go on earning again with impelling prestige, without having any mercy upon our girl depending only upon us, please consider my words.

Even the sun ruled entire earth in monopoly in daytime sleeps in night with its dream only. 

I did not have full enjoyment of embracing her body in my body.   

If you proceed, will it possible for you, not to recall her innocent character in midway, resting under the shadow of a tree that stands without leaves; the shadow appears as the dots on the skin of ‘Ulai’ deer.

When you tread on the footprints of the female-elephant which woos crying for its male having wound in body and stain in tusk, you could not walk steady in your prestige without falling in mercy. 

What shall I do then?




No comments:

Post a Comment