Pages

Tuesday, 1 November 2016

அகநானூறு Agananuru 378

தோழி வினவுகிறாள். தலைவி விளக்குகிறாள்.


1

செல்வம் பயன்படுத்த முடியாமல் தூங்கிக்கொண்டிருக்கும் வளமனையில் கூடி விளையாடித் திளைக்கும் மகளிர் கூந்தல் மணப்பதற்காக, வேங்கை மலர்கள், குழையுடன், ஆட்டிய காற்றில் உதிர்ந்து, பொன்னைப் போல் பூந்தாதுகளுடன் தரையில் கொட்டிக் கிடக்கும். 

ஆசை மூட்டும் தோகையினை உடைய மயில், வெவ்வேறு இன மலையாடுகள், முற்றிய கொம்புகளை உடைய ஆட்டுக் கடாக்கள் முதலானவை மகளிர் ஆடும் களத்தில் கொம்பு முதலானவை ஒலிப்பது போல் ஒலி எழுப்பிக்கொண்டு துள்ளி விளையாடும். 

பசுமையான இலைகளையும், வலிமையான கணுக்களையும் கொண்ட மூங்கில் வானத்தை விரும்பி வளர்ந்து ஆடிக்கொண்டிருக்கும். 

இப்படிப்பட்ட மலையின் தலைவன், உன் காதலன் பிரிந்த தனிமையைப் பொறுத்துக்கொண்டிருக்கிறாய். 
 
வங்கூழ் = காற்று
நகர் = வளமனை
வதுவை = கூடித் திளைத்தல்
தகர் = ஆட்டுக்கடா
2

சினம் கொண்டு தாய் வெறுப்புடன் பார்ப்பதைப் பொறுத்துக்கொண்டிருக்கிறாய். 

வாடைக்காற்று வீசும் பனிக்காலத்தைப் பொறுத்துக்கொண்டிருக்கிறாய். 

ஒளி மழுங்கிய சூரியன் மேலைக் கடலில் மறையும் மாலைத் துன்பத்தையும் பொறுத்துக்கொண்டிருக்கிறாய். 

இத்தனையும் உன்னைத் துன்புறுத்தும்போது எப்படித்தான் பொறுத்துக்கொண்டிருக்கிறாயோ தெரியவில்லை. – என்று கேட்கிறாயா தோழி. இதோ சொல்கிறேன் கேள்.

3

“பிரியமாட்டேன்” என்று என்னிடம் வஞ்சினம் கூறியவர் பிரிந்து சென்று வாழ்கிறார். 
அவர் வாழ்வதால் நானும் வாழ்கிறேன். 

அவர் நாட்டில் பெண்குரங்கு மந்தி பலாப்பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு முரட்டுக் குணம் கொண்ட ஆண்குரங்கு கடுவனோடு துள்ளி விளையாடும். 

அது மிக்க வலிமை கொண்ட பெண் தெய்வங்கள் வாழும் ஓங்கி உயர்ந்த மலை. 
ஒலிக்கும் அருவி அதில் இறங்குகிறது. 
அது அவரது குன்றம். 

அந்தக் குன்றத்தைப் பார்க்கிறேன். 
அதனால் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். 
 
கல்லா மந்தி = முரட்டுக் குணம் கொண்ட ஆண்குரங்கு
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  குறிஞ்சி

1
''நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்,
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள,
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர,
காமர் பீலி ஆய் மயில் தோகை 5
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக்
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல
ஆடு கள வயிரின் இனிய ஆலி,
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து,
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும்      10
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும்,
2
உடன்ற அன்னை அமரா நோக்கமும்,
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச்
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு
குட கடல் சேரும் படர் கூர் மாலையும்,            15
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி,
யாங்ஙனம் வாழ்தி?'' என்றி தோழி!
3
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர்
உள்ளார் ஆயினும், உளெனே அவர் நாட்டு
அள் இலைப் பலவின் கனி கவர் கைய     20
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து,
பாடு இன் அருவி சூடி,
வான் தோய் சிமையம் தோன்றலானே.

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது.
காவட்டனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

The lady tolerates the parting of her lover when he was earning wealth in a distant place far away. 
The friend-maid wonders about her behavior and asks her. 
The lady relies.  

Vengai flowers are blooming for the girls to wear on their head for fragrance; and fall on the ground when the heavy wind blows, spreading with their pollen as golden dusts spreading. 

Peacocks with their fine feathers, hill-sheep of various families, male goats etc are raising their voice as horn music in a festival. 

Bamboo bush is growing with its green leaves and nodes waving in the sky. 

He is the man of such mountain. 
You, my friend, asks me how you tolerating his separation?

Furthermore, your mother watches you in displeasure. 
The north-chill wind is blowing in winter. 
The sun sets in western sea leaving evening time to suffer parting lovers. 
How you are bearing all of these while they are insulting you? 

You, my friend, this is your question.  
This is my answer.

He assured me “I shall not leave you ever”; but he lives in a distant place without me; he lives there; so I am living here. 

He is there where female monkey having jackfruit in hands as drum, plays with its male. 

There is a waterfall where Damsels plays, appears in my sight. 
That is his mountain. 

I am happy with the sight of his mountain and survive.



No comments:

Post a Comment