Pages

Tuesday 1 November 2016

அகநானூறு Agananuru 377

பொருளீட்டச் செல்வது பற்றித் தலைவன் நினைத்துப் பார்க்கிறான்.


கோடைக்காலம் நீள்வதால் வாடி உதிர்ந்த புல்லரிசிகளை ஒழுங்காகச் செல்லும் சிற்றெறும்புகள் கொண்டு சென்று தம் வளையில் சேமித்து வைக்கும். 

அந்த நிலப் பகுதியில் வாழும் மறவர்கள் அந்த அரிசிகளை எடுத்துச் சென்று உணவாக்கிக் கொள்வர். 

அவர்கள் பலமுறை ஊரில் புகுந்து கறவை மாடுகளைக் கவர்ந்து செல்வதால் ஊரில் வாழும் செல்வப் பெருங்குடி மக்கள் வேறு ஊருக்குக் குடியேறிவிட்ட நிலையில் ஊர் மன்றம் பாழ்பட்டுக் கிடக்கும். 

அந்த மன்றத்தில் நரைத்த தலை கொண்ட முதியவர்கள் தம் ஆடும் தலையை இறக்கி வைத்துக்கொண்டு படுத்திருப்பர். 

அல்லது வல்லு விளையாடுவர். 
மன்றத்து மரத்தில் செதுக்கப்பட்டிருக்கும் வல்லுப்பலகை கறையான் தின்று பொலிவிழந்து காணப்படும். 

இப்படி நலமெல்லாம் சிதைந்த பொதுமன்றத்தில், அச்சம் தரும் பொதுமன்றத்தில், துன்பம் தரும் ஒரு மூலையில் நான் தங்கவேண்டி வரும். 

அங்குத் தங்கிக்கொண்டு, இனிய புன்னகை ததும்பும் என் மனைவியை நினைக்கவேண்டி வரும். 

அங்குப் புதியவராக (வம்பலர்), காலம் போக்க வேண்டும். 

இவையெல்லாம் எதற்காக?
இவரிடம் பெறலாம் என்ற ஆசையோடு என்னிடம் வந்தவர்களுக்கு வேண்டியனவற்றை வழங்கிப் புகழ் பொறுவதற்காக.

நெஞ்சே! இதனை நீ விரும்புகிறாயா?
  • கவை மனத்து இருத்தும் வல்லு” – மனத்தைப் பிளக்கும் வல்லு விளையாட்டு. திறமைக்கு இடமில்லாமல் ஊழ் ஏமாற்றும் விளையாட்டு.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

கோடை நீடலின், வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு, நெறி பட மறுகி,
நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த
வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர்
பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர,           5
கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து,
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி,
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,
வரி நிறச் சிதலை அரித்தலின், புல்லென்று,
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில்    10
இன்னா ஒரு சிறைத் தங்கி, இன் நகைச்
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி,
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
நசை தர வந்தோர் இரந்தவை
இசை படப் பெய்தல் ஆற்றுவோரே!     15

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.
மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

The man who is going to distant places calls his mind.

Ants moving in row gather grains fallen from the grasses due to hot sun in summer. 

The robbing people in arid track make use of the grain for their food. 

The rich peoples of the village migrated to some other places having affected by the robbery of grass-grain eating poor peoples. 

They robe cows of the rich people. 
There will be damaged free common inn. 
It will be damaged by moths. 

Good old men having white hair in head lay down their head in rest. 
They will also play ‘Vallu’ gambling rolling dice to get numbers by chance. 

The stage, they used to place and move coins will be engraved in wood which will also be damaged. 

I have to stay in a corner of the free-inn. 

Staying in such useless place I will ponder the sweet smile of my lover. 

All these tiresome deeds are what for? 
To earn repute by helping others endowing wealth they need. 
You, my mind, are you ready to proceed? 



No comments:

Post a Comment