Pages

Monday 31 October 2016

அகநானூறு Agananuru 376

அரசன் கரிகாலன் முன்னிலையில் 
ஆட்டன்-அத்தி நீச்சல் நடனம் ஆடியது


காதல் பரத்தை மனைவி போன்ற நடத்தை கொண்டவள். சிலப்பதிகார மாதவி கோவலின் காதல் பரத்தை. 

மனைவியிடம் செல்லும் காதலனை, (தலைவனை) காதல் பரத்தை வேண்டுகிறாள்.

மகிழ்ந! செல்லாதே. உனக்கு நான் செய்யவேண்டிய கடமை உள்ளது.

அத்தி காவிரியாற்றுக் கழார் நீர்துறையில் நீச்சல்-நடனம் ஆடிக் காட்டினான். 
நீந்தத் தெரியாத யானை பெருவெள்ளத்தில் உருண்டு புரண்டு நீந்துவது போல இவன் வேண்டுமென்றே திறமையுடன் உருண்டு புரண்டு நீரில் ஆடினான். 

அது ஓடும் புனல் மிகுந்து மருத மரம் ஓங்கி நிற்கும் கழார் என்னும் ஊரிலிருந்த துறை. 

கழார் நெற்கதிர் வளம் மிக்க ஊர். அந்தக் கழார் ஊருக்கு முன் இருந்த துறை ‘கழார் முன்துறை’.

அரசன் கரிகால் வளவன் தன் சுற்றத்தாருடன் அதனைக் கண்டு களித்தான். 

அத்தியின் சிவந்த கால்கள் நீருக்கு மேலே வந்து புரண்டன. 
இசைக்கேற்ப அவன் ஆடினான். 
என்றலும் ஈரம் (தண்பதம்) பட்டிருந்த அவன் கால்களில் பண்ணிசை எழவில்லை. 
வயிற்றில் கருநிறக் கச்சு (belt) அணிந்திருந்தான். 
வயிற்றில் அணிந்திருந்த பொன்னால் செய்த பாண்டில் அணிகலனும், அதில் இருந்த மணிகளும் நீருக்கு மேல் புரளும்போது ஒலித்தன.

இப்படி ஓடும் புனலில் விளையாடும் அத்தியின் அழகில் மயங்கி அவனுடன் ஆடிய ‘காவிரி’ என்னும் பெண் அவனை நீரோடும் போக்கில் அழைத்துச் சென்று ஒளித்துக்கொண்டாள். 

காவிரி அத்தியை ஒளித்து வைத்துக்கொண்டது போல் நான் உன்னை வைத்துக்கொண்டிருக்கிறேன். 

நீ உன் மனைவியிடம் சென்றால் நான் உன்னிடம் பிணக்கிக்கொள்ள முடியுமா? 
பிணக்குப் போட்டுக்கொள்ள மாட்டேன். 
என்றாலும் நீ செல்வதை நினைத்து என் நெற்றி பசந்து கிடப்பதைப் பார். 

நீ செல்வதாயின் குட்டுவன் ஆளும் மரந்தை நகரம் போன்ற என் அழகை என்னிடமே இருக்கும்படித் தந்துவிட்டுச் செல். 

இதுதான் என் வேண்டுகோள்.
  • மரந்தை – குட்டுவன் தலைநகரம். அசும்பிலுள்ள இறா மீன் வள்ளைக் கொடியை மயக்கிவிட்டு வயலில் தெறித்து விழும் நீர்வளம் மிக்க ஊர்.
  • அசும்பு – வயலுக்கு நீரூட்டும் கால்வாய்
  • வள்ளை – உள்ளே துளை உள்ள கொடி. அழல் போன்று செந்நிறம் கொண்ட கொடி
  • பீள் – வலிமையான தோகையில் கதிர் வந்துகொண்டிருக்கும் நெல்லம்பயிர்
  • இறா – தூய்மையாள தலையுடன் வளைந்த உடலைக் கொண்டது
  • குட்டுவன் – குரங்கு போல் பிடரி மயிர் கொண்ட குதிரையை உடையவன்
பாடலில் அத்தி என்னும் ஆண்மகனும் 
காவிரி என்னும் பெண்மகளும் 
இப்படி ஆடினர்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  மருதம்

செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன்
கல்லா யானை கடி புனல் கற்றென,
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,             5
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,        10
காவிரி கொண்டு ஒளித்தாங்கு அன்னோ!
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின்
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின்
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி,
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய,     15
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக்
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே!

காதற்பரத்தை புலந்து சொல்லியது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

A historical event of synchronized swimming in the presence of King KariKalan is depicted in this poem.

A wife-like concubine prevents her lover not to leave from her saying these words.

You my lust-monger do not leave me. 
I have something to offer you more.

Atti, a synchronized player performed revealing his talent in Cauvery river pool at Kalar village in the presence of King KariKalan and his family. 

He swims rolling in his talent as an elephant swims rolling in flood. 

It is the river-pool where tree Marutam grows in its bank. 
The village KALAR is surrounded by paddy field.

While Atti depicts his show his legs appear upside down in water. 
He dances with rhythm of music without sound in one time. 
In another time his bells in his golden ornament tied in waist rings while his belly rolls upside.

Cauvery, a girl who plays along with him fell in love with him; and pulled him down the stream of water. 

As the girl Cauvery hides the swimmer, I am having you in my house. 

If you go to your house to join with your wife, how can I prevent sulking? 

However please see my forehead with love-sick Pasalai. 

If you want to leave me please return my old beauty which you have taken with you. This is my humble request.





No comments:

Post a Comment