Pages

Monday 31 October 2016

அகநானூறு Agananuru 375

தலைவி தோழியிடம் சொல்கிறாள்.


இகுளை! “உன்னை விட்டுச் சென்றவர் திரும்பி வருவேன் என்று சொன்ன காலத்தை நீட்டிக்க மாட்டார். 
வருந்தாதே” என்று கூறுகிறாய். 
அதற்காக நான் வருந்தவில்லை. 
அவர் சென்ற இடத்து நிகழக்கூடியனவற்றை எண்ணி வருந்துகிறேன். 

அந்த வழியில் உள்ள கல்லா இளையர் தான் கற்றதில் தனக்குள்ள வில் திறமையைச் சோதித்துப் பார்க்கக்கூடியவர்கள். 

புதியவர்களிடம் பெறக்கூடிய பொருள் இல்லை என்றாலும் தம்மைச் சோதித்துப் பார்த்துக்கொள்வதற்காக, வழியில் செல்லும் புதியவர்களைக் கொன்று பறவைகளுக்கு ஊட்டிக் கும்மாளம் போடுவர் (கலிப்பர்)

நரிக்கூட்டம் உடல் கறியைத் தின்னும். 
வழியில் மேயும் ஆண் கழுகுகளின் விரல்களில் நெய்த்தோர் (இரத்தம்) கறை படிந்திருக்கும். 
அங்குள்ள நிழலில் இவை மட்டுமே இருக்கும்.

போர்த் திறமையும், கணைய மரம் போன்ற தோள் வலிமையும் கொண்டவர் சோழர். 
அந்தச் சோழர்களின் பெருமகன் ‘இளம்பெருஞ்சென்னி’. 

அவன் தன் புகழை நிலைநாட்டுவதற்காகவும், தன் குடிமக்களைக் காப்பாற்றும் கடமைக்காகவும், விட்டகுறை தொட்டகுறையை முடிப்பதற்காகவும் பாழி நகரில் இருந்த செங்கோட்டையை (செம்பு உறழ் புரிசை) அழித்தான். 

அந்தக் கோட்டையில் தன்னை எதிர்த்த ‘வம்ப வடுகர்’ குடிமக்களின் தலைகளை யானைக் காலால் மிதிக்கச் செய்து சவட்டினான் (துவட்டினான்)

அப்படிப் பகைவரைக் கொன்ற யானையின் கொம்பு போல் காடே அச்சம் தருமாறு தோற்றமளிக்கும். 

அந்தக் காட்டு வழியில் அவர் சென்றிருக்கிறார். 

அவர் துன்பம் ஏதும் இல்லாமல் திரும்புகிறார் என்று தெரிந்தால் என் கண் அழாது அல்லவா?

இகுளை = தலைவி தோழியை விளிக்கும் சொல்.
இகுதல் = மனம் இடிந்து போதல். தலைவிக்காகத் தோழி வருந்துபவள்.
இகு < இகுளை

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

''சென்று நீடுநர்அல்லர்; அவர் வயின்
இனைதல் ஆனாய்'' என்றிசின் இகுளை!
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர்
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலை,                        5
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்,
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல்,
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன்  10
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார்,
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி,
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்,       15
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர்
நோய் இலர் பெயர்தல் அறியின்,
ஆழல மன்னோ, தோழி! என் கண்ணே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
இடையன் சேந்தங் கொற்றனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

The lady says to her friend-maid.

My friend! you console me saying “the man, your lover who left you here and gone away for earning will not stay at his earning place more than the prescribed time he assured you; and he will return in time; don’t be worry shedding tears”. 

I hope as you say. 
But I am worrying for another purpose. 

The youngsters in that area where he is passing will test their talent shooting arrows on the newcomers passing by the way even if they have nothing in their hands to robe; and enjoy throwing their body to eat eagles with their blood stained nails. 

The foxes also eat the body. 
He has to rest such a kind of dreadful area.

King IlamPerunSenni, the Man of Chola family having enormous strength destroyed the fort at Pali city; and drove his elephant to thrush the heads of his opponent force of Vadugar race. 

The area he passes appears like that of his elephant’s blood stained tusk. 

If I hear the news of his safety my eyes will not drop tears.


No comments:

Post a Comment