Pages

Monday 31 October 2016

அகநானூறு Agananuru 374

மழை பொழிகிறது. 

கடலில் நீரை முகந்து சென்று, திசைகள் இருளும்படி, நிலம் தெரியாதபடி நீர் ஓடுமாறு, சுழன்று துன்புற்று, மேகம் பிளப்பது போல் பலவாறு மின்னி, தாழ்ந்து பணிவது போல நிலத்தருகில் வந்து, சோர்ந்துவிட்டது போல இடி முழக்கம் இல்லாமல் மழை பொழிகிறது. 

பாணர் யாழிசை போன்ற ஒலியுடன் மழை பொழிகிறது. 

மழை பொழிந்து நின்ற மறுநாள் விடியற் காலத்தில் களர்-மணல் மேடுகளில் மூதாய்ப் பூச்சிகள் குறு குறுவென ஓடுகின்றன. 

நீல மணியும் பவள மணியும் கொட்டிக் கிடப்பது போலக் கொட்டிக் கிடக்கும் காயாம் பூக்களுக்கு இடையில் மூதாய்ப் பூச்சிகள் ஓடுகின்றன. 

இப்படிக் கார்காலம் செம்மாந்த பொலிவுடன் தோன்றுகிறது. 

இப்போது அந்தக் கார்காலத்தின் மாலைக் காலம். 

தேரோட்டுவதில் தேர்ச்சி பெற்ற வலவ, நம் தேர் செல்லட்டும். 

பருத்த தோளும், சிறுத்த இடையும், திருந்திய அணிகலனும் கொண்ட காதல் மனைவி நம் விருந்தைப் பெறட்டும். 

இப்படித் தலைவன் தன் தேரோட்டியிடம் கூறுகிறான்.
  
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  முல்லை

மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி,
மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு,
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ,
போழ்ந்த போலப் பல உடன் மின்னி,
தாழ்ந்த போல நனி அணி வந்து,              5
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி,
இடியும் முழக்கும் இன்றி, பாணர்
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன
இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை,        10
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்,
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி,
மணி மண்டு பவளம் போல, காயா
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய,
கார் கவின் கொண்ட காமர் காலை,                       15
செல்க, தேரே நல் வலம் பெறுந!
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே!

பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
இடைக்காடனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

The next day of heavy rain velvet mites are moving on the clay-sand soil where Kaya flowers shed spreading on. 

It appears like shaped coral among blue diamond. 

It is now evening in rainy season. 
You my driver drive the horses in chariot fast with your talent. 
I will reach my house to give my wife enjoyment as she is longing for. 

She is a girl of beauty with vast breast and narrow hip to be enjoyable. 

The hero says to his chariot driver.



No comments:

Post a Comment