Pages

Sunday 30 October 2016

அகநானூறு Agananuru 373

நான் இங்கே படும் பாடு தெரியாமல் அங்கே என் காதலி கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பாள். நான் என்ன செய்வேன் என்று பொருள் தேடச் சென்ற இடத்தில் தலைவன் கலங்குகிறான்.


1

வேற்றரசன் வென்று பாழ் பட்டுக் கிடக்கும் போர்முனை. 
பீர்க்கங்கொடி படர்ந்திருக்கும் வீடு. 
மான்கள் விளையாடும் மன்றம். 
பருத்த கால்களை உடைய யானை உரசித் தூண் சாய்ந்த பொதியில். 
காட்டில் நடந்த களைப்புத் தீரச் செய்வதறியாமல் இங்குத் தங்கியிருக்கிறேன். 

மாலை நேரத் தனிமை என்னை வாட்டுகிறது. 
வீறாப்பு கொண்ட உள்ளம் என்னை மேலும் செல்லத் தூண்டுகிறது. 

தொங்கும் கையில் விரல்களைக் கோத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன். 

இப்படி இருக்கும் என் நிலைமையை வீட்டில் இருக்கும் என் காதலி உணரமாட்டாள்.

செதுக் காழ் = செதுக்கிய வயிரம் பாய்ந்த மரத்தூண்
புலம்பு = தனிமை
பணை = பருமை
மன்றம் = மேற்கூரை இல்லாத பொது இடம்
பொதியில் = மேற்கூரை உள்ள பொதுவிடம்
மீளி = வீரன்
2

என் காதலி இருண்ட கூந்தலை உடையவள். 
செம்பொன்னால் செய்த அணிகலன்களை உடையவள். 
மடந்தைப் பருவத்தினள். 
நள்ளிரவு இருட்டில் பஞ்சணையை அணைத்து வெப்ப மூச்சை மெல்லிதாக விட்டுக்கொண்டு, என் நெஞ்சத்தோடு பிணக்குப் போட்டுக்கொண்டு, கண்ணீர் மார்பகத்தை நனைக்க, அதனை விரல் நகத்தால் வழித்துத் தெறித்து எறிந்தவண்ணம் வருந்திக்கொண்டிருப்பாள்.

தோள் = மார்பகம், கண்ணீர் விழும் என்பதால் இதனை உணரலாம்.
உகிர் = நகம்
3

யானைப் படையுடன் வேந்தர் முற்றுகையிட்டுத் தாக்கும்போது ஒற்றை மதிலின் உச்சி ஞாயிலில் இருக்கும் மன்னன் போலத் தூங்காமல் இருப்பாள். 
அவள் இரங்கத் தக்கவள். 
நான் என்ன செய்வேன்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

1
முனை கவர்ந்து கொண்டென, கலங்கி, பீர் எழுந்து,
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து,
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சி,
செது காழ் சாய்ந்த முது காற் பொதியில்,
அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று,            5
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர,
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப,
தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு,
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்;
2
இரும் பல் கூந்தல், சேயிழை, மடந்தை,          10
கனை இருள் நடு நாள், அணையொடு பொருந்தி,
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு, ஐது உயிரா,
ஆய் இதழ் மழைக் கண் மல்க, நோய் கூர்ந்து,
பெருந் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி
மெல் விரல் உகிரின் தெறியினள், வென் வேல்   15
3
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போல,
துயில் துறந்தனள் கொல்? அளியள் தானே!

பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

Without knowing my difficulties here, my lover will be suffering with tears; what I shall do, the man on his way on earning in a distance place says to his mind.

I am staying in a destroyed village by war where creeper ridge-gourd is growing; deer are playing; and the wooden pillar has fallen when elephant scratches its body on the pillar. 

I am taking rest alone in the evening here. 
My prestige moves me to proceed further. 

I am sitting clubbing my hands on thigh and pondering my lover. 
My lover could not realize my position.

She is a girl with dark hair and with ornaments of gold, in her just crossed teenage. 

He will be sighing and picking her tears fallen on breast with her nail and throwing. 

She will be in tension as a king aiming in fort-top gallery when a monarch seizing. 

It is pity on her part. 
What shall I do?


No comments:

Post a Comment