மேகம் கடலில் நீரை முகந்து செல்லும். மேலைமலைத்
தொடரில் சந்தனம் போல் அப்பும்படி நீரை வாரி இறைக்கும். அதுதான் நான் குறியிட்டு வைத்திருக்கும்
காலம். என் காதலி ஒரு பேதை. அவள் தன் துன்பத்தைப் போக்கிக்கொள்ள நான் சொன்ன குறிக்காலம்.
அந்தக் குறிக்காலம் இப்போது வந்துவிட்டது.
உடனே செல்லவேண்டும்.
தலைவன் நினைக்கிறான்.
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
கடல் நீர் முகந்த
கமஞ் சூல் எழிலி
குடமலை ஆகத்து, கொள்
அப்பு இறைக்கும்
இடம்' என ஆங்கே
குறி செய்தேம், பேதை
மடமொழி எவ்வம் கெட. 33
அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும்
இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான
அறிகுறிகளும்.
No comments:
Post a Comment