![]() |
| பிடா, பிடவம் மலர் |
பாக, தேரை ஓட்டுக. கார்காலம் ஓடிவிடப் போகிறது.
காடெல்லாம் பிடா மலர்கள் பெருந்தகை போல் பூத்துக் குலுங்குகின்றன. கெடாப் புகழை விரும்பிச்
செல்வர் கொடை நல்குவது போல் அவை தேனை வழங்குகின்றன. வண்டினங்கள் தேனை உண்டு பாடிக்கொண்டிருக்கின்றன.
விரைந்து ஓட்டு.
தலைவன் சொல்கிறான்.
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
கடாஅவுக,
பாக! தேர் கார் ஓடக் கண்டே;
கெடாஅப்
புகழ் வேட்கைச் செல்வர் மனம்போல்
படாஅ மகிழ் வண்டு பாண் முரலும், கானம்
பிடாஅப்
பெருந்தகை
நற்கு. 32
அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும்
இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான
அறிகுறிகளும்.

No comments:
Post a Comment