Pages

Thursday, 1 September 2016

கார் நாற்பது KarNarpatu 31

திருநுதல் என் மனைவி. அவளுக்கு நான் திரும்பும் காலக்குறி சொல்லிவிட்டு வந்துள்ளேன். கார் என்னும் கார்த்திகைப் பூ கரையெங்கும் பூத்திருக்கும். நீரில் கிடக்கும் எருமை மழை பொழிவதால் மகிழ்ச்சியுடன் கரைக்கு வந்து அங்குப் படர்ந்திருக்கும் காந்தள் குடிகளைச் சூடிக்கொண்டு, போருக்குப் புறப்படும் மள்ளர் போல் பெருமிதத்துடன் செம்மாந்து நிற்கும். அப்போது நான் திரும்பிவிடுவேன்.
என்றேன்.
இப்போது நிற்கிறது.
நான் திரும்ப வேண்டும்.
தலைவன் நினைக்கிறான்.
இது கார் என்றும் கார்த்திகை என்றும் காந்தள் என்றும் குறிப்பிடப்படும் மலர் 

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

கார்ச் சேண் இகந்த கரை மருங்கின் நீர்ச் சேர்ந்து,
எருமை எழில் ஏறு, எறி பவர் சூடி,
செரு மிகு மள்ளரின் செம்மாக்கும் செவ்வி,
திருநுதற்கு யாம் செய் குறி.         31

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

No comments:

Post a Comment