மலை தழைத்திருக்கிறது. வானம் பொழிகிறது.
மழைத்துளிகள் நீரைப் பிளக்கின்றன. நிலமெல்லாம் இனிய மழை. எங்கும் மழை பொழியும் மணம்.
குளிரடிக்கும் ஊதைக்காற்று வீசுகிறது. இவை என் காதலியின் மடமைத் தன்மையின் பெருமையை
எடுத்துரைக்கின்றன.
அவளிடம் செல்ல வேண்டும்.
தலைவன் நினைக்கிறான்.
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
வரை மல்க, வானம் சிறப்ப, உறை போழ்ந்து
இரு நிலம் தீம் பெயல் தாழ, விரை நாற,
ஊதை உளரும், நறுந் தண் கா, பேதை
பெரு மடம் நம்மாட்டு உரைத்து. 30
அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும்
இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான
அறிகுறிகளும்.
No comments:
Post a Comment