Pages

Thursday, 1 September 2016

கார் நாற்பது KarNarpatu 29

கொட்டிக்கிடக்கும் பூக்கள் எல்லா இடங்களிலும் (ஞாங்கர்) மலர்ந்து கிடக்கின்றன. அவற்றில் தேன் உண்ணும் வண்டுகள் பாடுகின்றன. காடே இப்படிக் கிடக்கிறது. தனிமைக்குப் பகையாகக் கீழைக்காற்று மேகம் எங்கும் மூடுகிறது. இப்படி முகம் காட்டும் காட்டை விட்டுவிட்டு நான் உடனே திரும்பியாக வேண்டும்.
தலைவன் இப்படி நினைக்கிறான்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

பொங்கரும் ஞாங்கர் மலர்ந்தன; தங்காத்
தகை வண்டு பாண் முரலும், கானம்; பகை கொண்டல்
எவ்வெத் திசைகளும் வந்தன்று; சேறும் நாம்,
செவ்வி உடைய சுரம்.       29

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

No comments:

Post a Comment