Pages

Thursday, 1 September 2016

கார் நாற்பது KarNarpatu 28

இது குமிழம் பழம்
இதன் பூ பொன் நிறத்தில்
இருக்குமாம் 
வானம் இசை முழங்குகிறது. குமிழம் பூ பொன் போல் கொத்தாகப் பூத்திருக்கிறது. இப்படிக் கார்காலம் தன் முகத்தைக் காட்டுகிறது.
நெஞ்சே!
காதலியின் ஊரில் எங்கள் காதல் பற்றிக் கவ்வை பேசித் தூற்றுகின்றனர். அது அங்குவதற்காக உடனே செல்லவேண்டும்.
தலைவன் நினைவு இப்படி ஓடுகிறது.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

இமிழ் இசை வானம் முழங்க, குமிழின் பூப்
பொன் செய் குழையின் துணர் தூங்க, தண் பதம்
செல்வி உடைய, சுரம் நெஞ்சே! காதலி ஊர்
கவ்வை அழுங்கச் செலற்கு.       28

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

No comments:

Post a Comment