வானம் இடி முழங்குகிறது; முருகன் திருவிழா
முழக்கம் போல முழங்குகிறது. காடெல்லாம் குருகிலைப் பூ பூத்துக் குலுங்குகிறது. “அவர்
என்னைப்பற்றி நினைக்காமல் பிரிந்து சென்றுவிட்டார்” என்று அவரோடு நான் பிணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறேன்.
பசப்பு நோயோ அவர் பிரிவைப் பாராட்டிக்கொண்டு என் உடம்பெல்லாம் (பள்ளி = இடம்) வந்து பாய்கிறது.
![]() |
| இது காளி ஆட்டம் | இது போல் முருகன் ஆட்டம் | முருகன் ஆட்டம் "முருகியம்" எனப்படும் | வேலன் என்னும் பூசாரி முருகியம் ஆடுவான். | இதனை வெறியாட்டு என்றும் கூறுவர். |
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
முருகியம் போல்
வானம் முழங்கி இரங்க,
குருகிலை
பூத்தன
கானம்;
பிரிவு
எண்ணி,
'உள்ளாது அகன்றார்' என்று ஊடி யாம் பாராட்ட,
பள்ளியுள்
பாயும்,
பசப்பு. 27
அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும்
இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான
அறிகுறிகளும்.

No comments:
Post a Comment