சில சொல் மட்டும் பேசும் தோழியே!
கார்த்திகை தலைமையான திருநாள். நாட்டு மக்கள்
எல்லாம் தெருவில் விளக்கு ஏற்றி வழிபடுவர். அந்தக் கார்த்திகை விளக்குப் போல நிலமெல்லாம்
தோன்றிப் பூ பூத்துத் திகழ்கிறது. மழை பொழிகிறது. இது அவர் வருகிறார் என்பதை உணர்த்தும்
அறிகுறி.
தோழி தலைவிக்குச் சொல்கிறாள்.
![]() |
| இது தோன்றி மலர். இக்காலத்தில் இதனை மருத்தோன்றி என்றும், மருதாணி என்றும் வழங்குவர். மரு என்றால் மணம். மணம் தோன்றும் பூ மருத்தோன்றி. கார்த்திகை விளக்குப் போல தோன்றிப் பூ பூத்துக் கிடக்கிறதாம். |
![]() |
| இது கார்த்திகை விளக்கு. கார்த்திகை விளக்குப் போலத் தோன்றிப் பூ பூக்குமாம். இது கார்கால அறிகுறி. |
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி; சிலமொழி!
தூதொடு வந்த, மழை. 26
அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும்
இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான
அறிகுறிகளும்.


No comments:
Post a Comment