Pages

Thursday, 1 September 2016

கார் நாற்பது KarNarpatu 25

இது நெல்லரிசிப் பொரி
இதுபோல் தினையரிசிப் பொரி
தினையரிசிப் பொரி போல்
முல்லை பூத்துக் கிடக்கிறதாம்
அவள் மேனியில் பசலை பாய்ந்து கிடக்கிறாள். வரகுப் பொரி போல் நிலமெல்லாம் முல்லை பூத்துக் கிடக்கிறது. இது அவர் சொன்ன காலக் குறி. அவர் வரவில்லையே என்று கண்ணீர் வடிக்கிறாள். இதுதான் கண்ணீர் வடிக்கிறாள்.
தோழி நினைக்கிறாள்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

கருங் கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து,
ஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன;
சேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று
கூர்ந்த, பசலை அவட்கு. 25

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

No comments:

Post a Comment