தொலைவிடத்தில் இருக்கும் தலைவன் தன் நெஞ்சுக்கு
ஆணையிடுகிறான்.
நெஞ்சே!
எல்லாப் பணியும் கிடக்கட்டும்.
என்னவள் தன் கூந்தல் விரிந்த நிலையில் கண்ணில்
பனியைக் கொட்டிக்கொண்டிருப்பாள்.
கல் நிறைந்த காடு யானையின் மதம் ஒழுகி நாறுகிறது.
கார்மேகம் பகலிலும் பொழிகிறது.
உடனே புறப்படு.
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
எல்லா வினையும் கிடப்ப,
எழு, நெஞ்சே!
கல் ஓங்கு கானம்
களிற்றின் மதம் நாறும்;
பல் இருங் கூந்தல்
பனி நோனாள்; கார் வானம்
எல்லியும் தோன்றும், பெயல். 24
அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும்
இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான
அறிகுறிகளும்.
No comments:
Post a Comment