Pages

Thursday, 1 September 2016

கார் நாற்பது KarNarpatu 34

யாவரும் விரும்பும் திரு என்னும் பேரழகு நெற்றி கொண்ட முகத்தை உடையவள் அவள். அவளிடம் அவர் திரும்பி வரும் காலம் குறித்துவிட்டுச் சென்றார். கடலலை வெறுக்கும்படி பெருமிதத்துடன் வானம் நீரைப் பருகும். மலைக்குக் கொடையாக வழங்கும். அதுதான் அவர் குறிப்பிட்ட காலம்.
தோழி நினைத்துப் பார்க்கிறாள்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

விரி திரை வெள்ளம் வெறுப்பப் பருகி,
பெரு விறல் வானம் பெரு வரை சேரும்
கரு அணி காலம் குறித்தார், திரு அணிந்த
ஒள் நுதல் மாதர் திறத்து.             34

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

No comments:

Post a Comment