தலைவியைத் தலைவனுடன் திருட்டுத்தனமாக அனுப்பும் தோழி, தலைவியை வாழ்த்துகிறாள்.
1
உன் கூந்தலையும், தோளையும் தடவிக் கொடுக்கிறேன். எதற்காக? நீ என்னை விட்டுப் போகிறாயே என்னும் அச்சத்தால். என்றாலும் என்ன செய்வேன். நீ அவருடன் செல்வதற்காகத் துடித்துக்கொண்டிருக்கிறாய்.
2
சிற்றூரில் வாழும் பெண்கள் வளர்த்துவந்த பல கிளைக்கொம்புகளை உடைய முதிய மான் ஒடிவிட்டது, என வருந்தி, அங்கும் இங்கும் தேடித் திரிந்து, கிட்டாமைமையால், அதனை அழைக்கும்பொருட்டுக் குடுகுடுப்பையை மெல்ல ஆட்ட, அந்த இசை மென்மையாக வழிப்போக்கர் காதுகளில் இசைக்கும். அந்த இசை வழிப்போக்கரையும் புலம்ப வைக்கும். இப்படிப்பட்ட வருத்தம் தரும் காட்டு வழி ஆயிற்றே என்று எண்ணாமல் உன்னை அனுப்பிவைக்கிறேன்.
3
வெயிலில் காய்ந்துபோயிலுக்கும் மரங்கள் தழைக்கும் கால்களில் தளிர்த்து அழகுடன் திகழும்படி, வானம் இருண்டு, வெப்பம் நீங்குவதற்காக, மழை பொழிந்திருக்கிறது. புல் தழைக்கும் நுகும்பு மொட்டுகளில் செந்நிறம் ஊட்டப்பட்ட பஞ்சு பரந்து கிடப்பது போல மூதாய்ப் பூச்சிகள் காணப்படுகின்றன. அவை உனக்கு இன்பம் ஊட்டட்டும். எனக்குத் துன்பம் தரும் பிரிவு உனக்கு இன்பம் தருவதாக அமையட்டும்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
நல் நெடுங் கதுப்பொடு
பெருந் தோள் நீவி,
நின் இவண் ஒழிதல்
அஞ்சிய என்னினும்,
செலவு தலைக்கொண்ட பெரு
விதுப்பு உறுவி
2
பல் கவர் மருப்பின்
முது மான் போக்கி,
சில் உணாத் தந்த
சீறூர்ப் பெண்டிர் 5
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப்
பைதல் மென் குரல்
ஐது வந்து இசைத்தொறும்,
போகுநர் புலம்பும் ஆறே
ஏகுதற்கு
அரிய ஆகும் என்னாமை,
கரி மரம்
3
கண் அகை இளங்
குழை கால்முதல் கவினி, 10
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்க,
பசுங் கண் வானம்
பாய் தளி பொழிந்தென,
புல் நுகும்பு எடுத்த
நல் நெடுங் கானத்து,
ஊட்டுறு பஞ்சிப் பிசிர்
பரந்தன்ன
வண்ண மூதாய் தண்
நிலம் வரிப்ப, 15
இனிய ஆகுக தணிந்தே
இன்னா நீப்பின் நின்னொடு
செலற்கே.
உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச்
சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார்
பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
No comments:
Post a Comment