மதுரையின் புகழ் தமிழ் நாட்டகப் பரப்பெல்லாம்
பூத்துக் கிடக்கிறது. அந்தப் புகழ் குன்றுவது உண்டோ? இல்லை. கொடித்தேரான் பாண்டியன்
குன்றம் பொதியமலை போல புகழ் வளர்ந்துகொண்டே இருக்கும்.
பாடல் – சொல் பிரிப்புப்
பதிவு
தண் தமிழ் வேலித்
தமிழ்நாட்டகம் எல்லாம்
நின்று நிலைஇப் புகழ்
பூத்தல் அல்லது,
குன்றுதல் உண்டோ மதுரை, கொடித் தேரான்
குன்றம் உண்டாகும் அளவு
புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில்
உள்ளது
காலம் – கி. பி.
மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்
No comments:
Post a Comment