Pages

Tuesday, 9 August 2016

பரிபாடல் திரட்டு Paripadal Annex 10

திருமகள் நெற்றியில் திலகம்
திருமகளுக்கு இட்ட திலகம் போல் உலகுக்குத் திலகமாக விளங்கிப் புகழ் பூத்துக் கிடப்பது மதுரை. இந்தப் புகழ் வையைக்கு உண்டாகும் புகழ் அளவு பூத்துக் கிடக்கும்.

பாடல்சொல் பிரிப்புப் பதிவு

செய்யாட்கு இழைத்த திலகம்போல், சீர்க்கு ஒப்ப,
வையம் விளங்கிப் புகழ் பூத்தல் அல்லது,
பொய்யாதல் உண்டோ மதுரை புனை தேரான்
வையை உண்டாகும் அளவு

புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில் உள்ளது
காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:

Post a Comment