கார்த்திகைப் பெண் காதில் இருக்கும் பொன்னாலான
மகரக் குண்டலம் போல மதுரையின் புகழ் செல்வத்தோடு கோத்துக் கிடக்கும். கொடித்தேர்ப்
பாண்டியன் சொல்லிப் பாராட்டும் அளவுக்குக் கோத்துப் பூத்துக் கிடக்கும்.
பாடல் – சொல் பிரிப்புப்
பதிவு
கார்த்திகை காதில் கன மகர
குண்டலம்போல்,
சீர்த்து விளங்கித் திருப் பூத்தல் அல்லது,
கோத்தை உண்டாமோ மதுரை,
கொடித் தேரான்
வார்த்தை உண்டாகும் அளவு
புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில்
உள்ளது
காலம் – கி. பி.
மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்
No comments:
Post a Comment