கொடை வழங்குபவர்களை உலகம் கொண்டாடும். கொடையை
ஏற்பவர்களைக் கண்டு வழங்குவோர் மகிழ்வர். இந்த இரண்டும் மதுரையிலும் திருப்பரங்குன்றத்து
முருகன் கோயிலிலும் நிகழும். இந்த இரண்டு இடங்களிலும் வாழ்வோரே வாழ்வார் எனப்படுவார்.
மற்றையாரில் தேவர் உலகம் செல்வார் யார்?
பாடல் – சொல் பிரிப்புப்
பதிவு
ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப்
பார்த்து உவக்கும்
சேய் மாடக் கூடலும்,
செவ்வேள் பரங்குன்றும்,
வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்; மற்றையார்
போவார் ஆர், புத்தேள்
உலகு
புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில்
உள்ளது
காலம் – கி. பி.
மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்
No comments:
Post a Comment