எது இனிது? வையைப் புனலில் நீராடுவதா? திருப்பரங்குன்றத்தை
வழிபட்டுச் சுவைத்தலா? வேலின் நுனி போல் பாயும் கண்ணை உடைய இவளோடு நான் எதனைச் செய்து
இன்புறுவேன்? இப்படி ஒருவனை மருளவைப்பது இந்த இடலகளுக்கு இயல்பு.
பாடல் – சொல் பிரிப்புப்
பதிவு
'வையை வருபுனல் ஆடல்
இனிதுகொல்?
செவ் வேள் கோ
குன்றம் நுகர்தல் இனிதுகொல்?
வை வேல் நுதி
அன்ன கண்ணார் துணையாக
எவ்வாறு செய்வாம்கொல், யாம்?'
என, நாளும்,
வழி மயக் குற்று மருடல்
நெடியான் 5
நெடு மாடக் கூடற்கு
இயல்பு.
இப் பகுதி தொல்காப்பியம்
மெய்ப்பாட்டியல் 11 ஆம் சூத்திர உரையில்
இளம் பூரணரால் காட்டப்பெற்றுள்ளது. இது பரிபாடலைச் சார்ந்ததாகலாம்
என ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர்.
காலம் – கி. பி.
மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்
No comments:
Post a Comment