புலவர்கள் தம் அறிவு என்னும் தராசுக் கோலில்
வைத்து நிறுத்துப் பார்த்தனர். உலகம் முழுவதையும் ஒரு தட்டிலும் தென்னவனின் நான்மாடக்
கூடலை மற்றொரு தட்டிலும் வைத்து நிறுத்தனர். உலகம் வைத்த தட்டு வாடிப்போய் மேலே போய்விட்டது.
கூடல் நகரம் இருந்த தட்டு பெருமையால் உயர்ந்து தாழ்ந்து நின்றது. – இவ்வாறு கூடல் நகரின்
பெருமை இதில் பேசப்படுகிறது.
பாடல் – சொல் பிரிப்புப்
பதிவு
உலகம்
ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர்
புலக் கோலால் தூக்க, - உலகு
அனைத்தும்
தான்
வாட, வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக்
கூடல் நகர்.
புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில்
உள்ளது
காலம் – கி. பி.
மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்
No comments:
Post a Comment