இந்தப் பாடல் பகுதி பரத்தை ஒருத்தியின் மனப்பாங்கைக்
கூறுகிறது.
முழவு ஈரமாக்கி முழக்கப்படும். இப்படி முழவு
முழங்க ஒருத்தி திருமணம் செய்துகொண்ட தோளாயிற்றே இவன் தோள் என்று எண்ணிப் பார்க்காமல்
அவன் மேல் ஆசை கொள்ளும் கட்டழகிதான் பரத்தை. அவளைக் காண்பவன் ஒருவனுக்கு மட்டும் அவள்
தன் நெஞ்சைத் தந்து நின்றுவிடுவதில்லை. புதியவனை அவள் நெஞ்சு நாடிக்கொண்டே இருக்கும்.
பாடல் – சொல் பிரிப்புப்
பதிவு
மண் ஆர்ந்து இசைக்கும்
முழவொடு கொண்ட தோள்
கண்ணாது உடன் வீழும்
காரிகை! கண்டோர்க்குத்
தம்மொடு நிற்குமோ, நெஞ்சு?
இப் பகுதி தொல்காப்பியம்
செய்யுள் இயல், சூ. 120, பேராசிரியர்,
நச்சினார்க் கினியர் உரைகளில் உள்ளது.
காலம் – கி. பி.
மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்
No comments:
Post a Comment