உன் கண் போலக் கருவிளைப் பூக்கள் பூத்துள்ளன.
கார்காலம் வந்துவிட்டது என்பதைக் காட்ட, தோன்றி மலர் எரியும் தீயைப் போலப் பூத்திருக்கிறது.
உன் தோள் வளையல் முன்கைக்கு நழுவும்படி உன்னை விட்டுவிட்டுப் பிரிந்தவர் வரப்போகிறார்
என்பதை அவை சொல்லிக் காட்டுகின்றன.
இப்படிச் சொல்லித் தோழி தலைவியை தேற்றுகிறாள்.
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
கருவிளை கண் மலர்போல்
பூத்தன, கார்க்கு ஏற்று;
எரி வனப்பு உற்றன,
தோன்றி; வரி வளை
முன்கை இறப்பத் துறந்தார்
வரல் கூறும்,
இன் சொல் பலவும்
உரைத்து. 9
அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

No comments:
Post a Comment