Pages

Wednesday, 31 August 2016

கார் நாற்பது KarNarpatu 8

பெண்மை இயல்புகளைக் கொண்ட நல்லவளே!
உலக வாழ்வு மண்ணாகும் இயல்பினைக் கொண்டது. இதில் நிலைபெற்றிருப்பது புகழ். இந்தப் புகழைத் தேட அவர் பொருளீட்டச் சென்றுள்ளார். பிரிந்துள்ளார். அவர் வரவேண்டும் என்று நீ கண்ணில் மை தீட்டிக்கொள்கிறாய். அதனைத் தெரிவிப்பது போலக் காயா மலர் அரும்பிப் பூத்திருக்கிறது.
அவர் வந்துவிடுவார்.
தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
காயா

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

மண் இயல் ஞாலத்து, மன்னும் புகழ் வேண்டி,
பெண் இயல் நல்லாய்! பிரிந்தார் வரல் கூறும்
கண் இயல் அஞ்சனம் தோய்ந்தபோல், காயாவும்
நுண் அரும்பு ஊழ்த்த புறவு.         8

அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

No comments:

Post a Comment