மாந்தளிர் போன்ற மேனிநலம் உடையவளே!
விரும்பி வருபவர்களுக்குக் கொடை தருவதற்கும்,
விரும்பாத பகைவரை அழிப்பதற்கும் உதவும் பொருளை ஈட்டிவரச் சென்றுள்ளார். பொறாமை இல்லாத
புகழ் போலவும், வேள்வித் தீ போலவும் மின்னி மழை பொழிகிறது. அவர் வந்துவிடுவார்.
தோழி தலைவிக்குச் சொல்லித் தேற்றுகிறாள்.
![]() |
| மாந்தளிர் | மகளிர் மேனி மாந்தளிர் போன்றது |
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
நச்சியார்க்கு ஈதலும், நண்ணார்த் தெறுதலும்,
தற் செய்வான் சென்றார்த்
தரூஉம், தளரியலாய்!
பொச்சாப்பு இலாத புகழ் வேள்வித்
தீப் போல
எச் சாரும் மின்னும்,
மழை. 7
அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

No comments:
Post a Comment