Pages

Wednesday, 31 August 2016

கார் நாற்பது KarNarpatu 10

என் தோழி!
வானத்தில் இடி முழங்குகிறது.
ஆண்யானை அதனோடு எதிர்முழக்கம் செய்கிறது.
காட்டாற்று ஒலியும் கேட்கிறது.
குதிரை பூட்டிய அவர் தேர் வரும் ஒலியும் கேட்கிறது.
இவை உன் மேனி தளிர்ப்பதற்காக வருகின்றன.
தோழி தலைவிக்குக் கூறுகிறாள். 

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

வான் ஏறு வானத்து உரற, வய முரண்
ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்பக்,
கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் என் தோழி!
மேனி தளிர்ப்ப, வரும்.     10

அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

No comments:

Post a Comment