வணர் ஒலி ஐம்பாலாய்!
சேரும் செல்வத்தைத் தேடிக்கொண்டு வருவதற்காகச்
சென்றுள்ளார்.
கோடல் பூ தலை தூக்கி ஆடும் பாம்பு போல் குலை
குலையாக முல்லை நிலமெல்லாம் பூத்து அவர் வரவைத் தெரிவிக்கின்றன பார்.
தோழி தலைவியை இப்படித் தேற்றுகிறாள்.
![]() |
| கோடல், வெண்காந்தள் |
![]() |
| ஐம்பால் |
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்,
வணர் ஒலி ஐம்பாலாய்!
வல் வருதல் கூறும்
அணர்த்து எழு பாம்பின் தலைபோல்
புணர் கோடல்
பூங் குலை ஈன்ற
புறவு. 11
அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.


No comments:
Post a Comment