Pages

Wednesday, 31 August 2016

கார் நாற்பது KarNarpatu 12

மை அழகை உண்ணும் கண் கொண்டவளே!
மயில் போன்ற சாயலை உடையவளே!
சந்தேகத்துக்கு இடமில்லை. அவர் வருதல் உறுதி.
எண்ணெய் பூசப்பட்ட யானை போல் பெருமேகங்கள் நாள்தோறும் வானத்தில் ஏறுகின்றன பார்.
இப்படிச் சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

மை எழில் உண் கண், மயில் அன்ன சாயலாய்!
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்;
நெய் அணி குஞ்சரம் போல, இரும் கொண்மூ
வைகலும் ஏரும், வலம். 12

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

No comments:

Post a Comment