ஏந்தலாக உயர்ந்து அழகுடன் திகழும் அல்குலை
உடையவளே!
உன்னிடம் அவர் ஏமம் (நிம்மதி) அடைந்தாரே அந்தக் கூந்தல் தாழ்வது போல மழை
பொழிகிறது. வேந்தன் வாள் வீசிவது போல் கண் கூசும்படி மின்னுகிறது.
அவர் சொன்ன காலம் இது.
வந்துவிடுவார்.
இவ்வாறு சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
ஏந்து எழில் அல்குலாய்!
ஏமார்ந்த காதலர்
கூந்தல் வனப்பின் பெயல்
தாழ, வேந்தர்
களிறு எறி வாள்
அரவம் போலக் கண் வெளவி,
ஒளிறுபு மின்னும், மழை. 13
அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும்
இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான
அறிகுறிகளும்.
No comments:
Post a Comment