ஒளி திகழும் அணிகலன் அணிந்தவளே!
செல்வம் கொண்டுவரச் சென்ற உன் காதலர் உடனை
வரவிருப்பது தெளிவாகிவிட்டது. கார் காலம் தன் முல்லைப் பூப் பற்களைக் காட்டிக்கொண்டு
இனிமையாக மெல்ல சிரிப்பதைப் பார்.
அதுதானே அவர் வருவேன் என்று சொன்ன காலம்?
இவ்வாறு சொல்லித் தலைவயைத் தோழி தேற்றுகிறாள்.
![]() |
| வயங்கிழை | இக்காலம் |
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
செல்வம் தரல் வேண்டிச்
சென்ற நம் காதலர்
வல்லே வருதல் தெளிந்தாம்;
வயங்கிழாய்!
முல்லை இலங்கு எயிறு
ஈன, நறுந் தண் கார்
மெல்ல இனிய நகும். 14
அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும்
இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான
அறிகுறிகளும்.

No comments:
Post a Comment