Pages

Tuesday, 30 August 2016

கார் நாற்பது KarNarpatu 4

விளையாடும் மகளிர் போல மயில்கள் ஆடுகின்றன. கொன்றை (கடுக்கை) பூத்துக் குலுங்குகிறது. பாடும் வண்டுகள் பூவில் ஊதும் ஒலியுடன் தேன் உண்ணுகின்றன. 
பணைத்தோளி!
அவர் சொல்லியபடி வந்துவிடுவார். உன் பசலை நோயைத் தீர்க்கும் மருந்து இதுதான்.
பணைத்தோளி
பருத்த தோளினை உடையவள்

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள,
காடும் கடுக்கை கவின் பெறப் பூத்தன;
பாடு வண்டு ஊதும் பருவம், பணைத் தோளி!
வாடும் பசலை மருந்து.   4

அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

No comments:

Post a Comment