Pages

Tuesday, 30 August 2016

கார் நாற்பது KarNarpatu 3

நல்ல நிறத்தில் வரி தெரியும் பாதிரிப் பூ வாடும்படிக் காற்று வீசுகிறது. முல்லை நிலத்தில் மழைக்கட்டி ஆலிகள் உருளும்படி மழை பொழிக்கிறது. இது ஒருத்தியை மட்டும் வாடச் செய்கிறதே.
பாதிரி மலர்

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

வரி நிறப் பாதிரி வாட, வளி போழ்ந்து
அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள,
உரும் இடி வானம் இழிய, எழுமே
நெருநல், ஒருத்தி திறத்து.            3

அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

No comments:

Post a Comment