Pages

Tuesday, 30 August 2016

கார் நாற்பது KarNarpatu 2

சூரியன் வெயில்சூடு தணிந்து வறுமையில் வாடுகிறது. கார்காலம் செல்வம் நிறைந்து திகழ்கிறது. இந்தச் செல்வம் காடுகளில் பூவாக மலர்ந்துள்ளது.
கொடுங்ககுழாய்
நம்மவர் இப்பொழுதே வந்துவிடுவார். வானம் மின்னுகிறதே, அதுதான் அவர் அனுப்பியிருக்கும் தூது.
ஆப்பிரிக்க நாட்டுக் கொடுங்குழை
கொடுங்குழை = காது வளையம்
காது வளையம் அணிந்த பெண்

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

கடுங் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த,
நெடுங் காடு நேர் சினை ஈன, - கொடுங்குழாய்!
'இன்னே வருவர், நமர்' என்று எழில் வானம்
மின்னும், அவர் தூது உரைத்து.                2

அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.



No comments:

Post a Comment