Pages

Tuesday, 30 August 2016

கார் நாற்பது KarNarpatu 1

முழங்கும் கடலின் வண்ணம் கொண்டவன் திருமால். அவன் மார்பில் இருக்கும் மாலை போல் வானவில் தோன்றி மழை பொழியும் காலத்தில் திரும்பி வந்துவிடுவேன் என்று சொன்னவர் வரவில்லை போல் தெரிகிறதே. வானம் கருவுற்றிருந்து ஆலித் துளிகளுடன் மழை பொழிகிறதே. – தலைவி சொல்கிறாள்.
திருமால் மார்வில் ஆரம்

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார்போல்,
திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ,
'வருதும்' என மொழிந்தார் வாரார்கொல், வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து?             1

அகப்பொருள் முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.


No comments:

Post a Comment