கலைத்திறன் கொண்ட அவர் தேர் சென்ற வழியில்
முல்லை படர்ந்து பூக்கிறது.
சிறந்த நெற்றியைக் கொண்டவளே!
மழை போன்ற கண்ணும், பேதைமை மொழியும் வாயும்
கொண்டவளின் பல்வரிசை தெரிவது போல முல்லை பூத்துக் கிடக்கிறது.
தலைவியும் தோழியும் பேசிக்கொள்கின்றனர்.
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
பொறி மாண் புனை
திண் தேர் போந்த வழியே
சிறு முல்லைப் போது
எல்லாம், செவ்வி நறு நுதல்,
செல்வ மழைத் தடங்
கண் சில் மொழி, பேதை
வாய்
முள் எயிறு ஏய்ப்ப,
வடிந்து. 21
அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும்
இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான
அறிகுறிகளும்.
No comments:
Post a Comment