பெருமிதம் கொண்ட மன்னனின் போர்தொழில் மடிந்துவிட்டது.
வழியெங்கும் மழை பொழிந்து பதமாக உள்ளது. நஞ்சு-மணி கொண்ட நாகம் நடுங்கும்படி இடி முழங்குகிறது.
போருக்கெழுந்த மன்னன் படை போல மழைமேகக் கூட்டம் செல்கிறது.
நானும் திரும்பவேண்டும்.
தலைவன் இப்படி நினைக்கிறான்.
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
வீறு சால் வேந்தன்
வினையும் முடிந்தன;
ஆறும் பதம் இனிய
ஆயின; ஏறொடு
அரு மணி நாகம்
அனுங்க, செரு மன்னர்
சேனைபோல் செல்லும், மழை. 20
அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும்
இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான
அறிகுறிகளும்.
No comments:
Post a Comment