Pages

Wednesday, 31 August 2016

கார் நாற்பது KarNarpatu 19

மராம்பூ வெள்ளை நிறம்
சிவந்த கால்களைக் கொண்ட மரா மரமானது கலப்பை ஏந்திய பரசுராமன் நிறம் போல், வெள்ளை நிறத்தில் பூத்துக் கிடக்கிறது. பசுமையான வளையல்களை அணிந்துள்ள திருமகள் தோளைப் பெறவேண்டி அவர் பொருளீட்ட நீண்ட வழியில் சென்றுள்ளார். அவர் பின்னே என் நெஞ்சும் செல்கிறது.
தலைவி தோழியிடம் இப்படிச் சொல்கிறாள்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

நாஞ்சில் வலவன் நிறம் போலப் பூஞ் சினைச்
செங் கால் மராஅம் தகைந்தன; பைங் கோல்
தொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி,
நெடு இடைச் சென்றது, என் நெஞ்சு.     19

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

No comments:

Post a Comment