கல் பயின்று கிடக்கும் காட்டைக் கடந்து அவர்
சென்றுள்ளார். அவர் திரும்பி வரவேண்டும் என்பதற்காக இடி முழக்கத்துடன் வானம் பொழிகிறது.
அதனால், வறுமையில் வாடுபவர் போல வாடிக்கிடந்த காடானது, செல்வர் மனம் போலச் செழிப்புற்று
அழகுடன் திகழ்கிறது.
தோழி தலையிடம் சொல்லி மகிழ்கிறாள்.
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
கல் பயில் கானம்
கடந்தார் வர, ஆங்கே
நல் இசை ஏறொடு
வானம் நடு நிற்ப,
செல்வர் மனம்போல் கவின்
ஈன்ற, நல்கூர்ந்தார்
மேனிபோல் புல்லென்ற காடு. 18
அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும்
இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான
அறிகுறிகளும்.
No comments:
Post a Comment