பாறாங்கல் கொண்ட மலைமேல் படமெடுக்கும் பாம்பைக்
கொன்று, இடிக்கும் குரலோடு ஏறிச் செல்லும் மேகம், கடலைப் பருகி, ஒன்று திரண்டு, இருண்டு,
வானம் மழை பொழிய வருகிறது. அதைக் பார்த்ததும் அவர் வந்துவிடுவார் என்னும் நம்பிக்கையில்
என் நெற்றியானது பிறை போன்ற பண்டைய அழகினைக் கொண்டு திகழ்கிறது. நான் ஒரு அறிவில்லாப்
பேதை.
தலைவி இவ்வாறு சொல்லித் தன்னை நொந்துகொள்கிறாள்.
பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு
அறைக் கல் இறு
வரைமேல் பாம்பு சவட்டி,
பறைக் குரல் ஏறொடு
பெளவம் பருகி,
உறைத்து இருள் கூர்ந்தன்று,
வானம்; பிறைத் தகை
கொண்டன்று, பேதை! நுதல். 17
அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக்
கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக்
கண்ணங்கூத்தனார். காலம்
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும்
இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான
அறிகுறிகளும்.
No comments:
Post a Comment