Pages

Wednesday, 31 August 2016

கார் நாற்பது KarNarpatu 16

அசோகு
தளிர்
இந்தத் தளிர் போன்ற மேனி
பருத்த தோளினை உடையவளே!
செயலைத் தளிர் போன்ற உன் மேனி பசலைநோய் கொண்டிருப்பது கண்டு கருங்குயில் அழுகிறது. மயில் நடுங்குகிறது. வானம் உருமுகிறது.
அவருக்குத் தெரிந்துவிடும்.
வந்துவிடுவார்.
இவ்வாறு சொல்லித் தலைவயைத் தோழி தேற்றுகிறாள்.

பாடல், சொல் பிரிப்புப் பதிப்பு

கருங் குயில் கையற, மா மயில் ஆல,
பெருங் கலி வானம் உரறும் - பெருந்தோள்!
செயலை இளந் தளிர் அன்ன நின் மேனிப்
பயலை பழங்கண் கொள.               16

அகப்பொருள், முல்லைத்திணை ஒழுக்கம் பற்றிக் கூறும் 40 பாடல்கள் கொண்ட நூல் கார்நாற்பது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்காலம் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
முல்லைத்திணை ஒழுக்கம் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும், தலைவி தலைவன் வரவுக்காகக் காத்திருத்தலும், காத்திருத்தலுக்கான அறிகுறிகளும். 

No comments:

Post a Comment