ஊரன் பரத்தையோடு வாழ்ந்துவிட்டு இல்லம் திரும்புகிறான்.
மனைவி ஊடுகிறாள்.
வாயிலாக வந்த விறலி ஊடலைத் தீர்த்துவைக்க முனைகிறாள். விறலியிடம் மனைவி சொல்கிறாள்.
1
ஊரன் அவளோடு எப்படியெல்லாம் இருந்திருப்பானோ?பேடி பெண்வேடம் போட்டுக்கொண்டு ஆடுவது போல ஒரு நிகழ்வு.பலரும் சிரிக்கும்படி விளையாட்டுச் சிறுவர்கள் எருமைமீது ஏறிக்கொண்டு செல்வர்.அது போல, பெரிய பாறைமேல் அமர்ந்திருக்கும் குரங்கு தோன்றும். அப்படித் தோன்றும் நாட்டின் தலைவன் இந்த நாடன்.
- பருத்துத் திருகிய கொம்புகளை உடையது எருமை. முடி வளர்ந்திருக்கும் சடையெருமை. கறுகறுத்த அதன் முதுகில் சிறுர்கள் ஏறிக்கொண்டு செல்வர்.
2
ஈங்கை இலையின் தளிர் போல் மேனியைக் கொண்ட பெண்ணின் முலையில் ஆராக் காதலோடு தன் மாலை குழையும்படி ஊரன் கிடந்தான்.(ஈங்கை இலையானது, இலையின் நுனியில் முள்ளைக் கொண்டிருக்கும். சிறுவர்கள் சற்றே வலியைப் பொறுத்துக்கொண்டு அதன் இலைகளை உடம்பில் குத்தி ஆட்டிக்கொண்டு விளையாடுவர் – பரத்தை உடல் மாந்தளிர் போன்றது அன்று. ஈங்கைத்திர் போன்றதாம்)
3
மேளம் முழங்க அவன் அவளைத் தழுவுவானாம். அது அவனுக்குச் சலித்துவிட்டது போலும். இங்கு வர விரும்புகிறான்.
4
வேளிர் மக்கள் வாழும் ஊர் வீரை.வீரையில் உப்புக் குவியல் மழையில் நனைந்து உருகுவது போல அவனை நினைத்துக்கொண்டு நான் உருகுகிறேன்.என் தோளணிகள் கழல்கின்றன.என் நிலைமை இப்படி.அவன் நிலைமை அப்படி.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, மருதம்
1என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப்பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப,நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமைமயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம்,சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத் 5துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்,2மாரி ஈங்கை மாத் தளிர் அன்னஅம் மா மேனி, ஆய்இழை, மகளிர்ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துஆராக் காதலொடு தார் இடை குழைய, 103முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து,4அடுபோர் வேளிர் வீரை முன்துறை,நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை,பெரும் பெயற்கு உருகியாஅங்கு, 15திருந்து இழை நெகிழ்ந்தன, தட மென் தோளே?
வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள்
வாயில் மறுத்தது.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment