Pages

Thursday, 21 July 2016

நற்றிணை Natrinai 188

மோதிரம் அணிந்த விரல்கள் போல
வாழைக்காய்ப் பூமொட்டு
நீரோடும் மலைச்சோலை. அங்குத் தழைத்திருக்கும் வாழைமரம். அதன் பூ மடல்களுக்கு இடையில் பூ மொட்டு. அந்தப் பூமொட்டு போல் இதழ்களைக் கொண்ட காந்தள் பூக்கள். மகளிர் விரல்கள் போலக் காந்தள் இதழ்கள். அவர்கள் விரலில் அணிந்திருக்கும் மோதிரம் (மோசை) போல வாழைக்காய் மொட்டுகள். வெற்பன் இப்படிப்பட்ட வாழையும், காந்தளும் கொண்ட மலையின் தலைவன். வெற்ப! நீ திருமணம் செய்துகொள்ளாமல் வந்துகொண்டிருப்பாய் என்று அன்றே நன்றாகத் தெரிந்துகொண்டிருந்தால், என் தலைவி தோள் நலம் அழிந்திருக்காதே. (உன்னோடு உறவு கொண்டிருக்க மாட்டாளே). தோழி தலைவனிடம் சொல்கிறாள்.   

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – குறிஞ்சி

படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்
மெல் விரல் மோசை போல, காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப
நன்றி விளைவும் தீதொடு வரும் என
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்துத்
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணைத் தோள் அழியலள் மன்னே

பகற்குறி மறுத்து வரைவு கடாயது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment