Pages

Wednesday, 6 July 2016

நற்றிணை Natrinai 145

காமர் கொண்கன்


உப்பங்கழி அலை மோதும் ஈரமான வெண்மணலில் பூத்திருக்கும் அடுப்பங்கொடியின் மலரை அங்கு விளையாடும் மகளிர் தன் கூந்தலில் சூட்டிக்கொள்வர். 

என் நெஞ்சம் கொண்டவனோடு (காமர் கொண்கன்) நான் கொண்டுள்ள உறவு (கேண்மை) மென்மையானது (ஐது)
உடலுறவு இல்லை (ஏய்ந்தில்லை)

அப்படி இல்லாத நிலையிலும் அவன் என்னோடு உறவு கொண்டுள்ளான் என்பது போல எண்ணிக்கொண்டு “அவன் எங்கே” என்று அன்னை வினவுகிறாள். 
அறம் இல்லாமல் வினவுகிறாள். 

நான் புணர்ச்சி இல்லாப் பொலிவுடன் விளங்குவது தாய்க்குத் தெரியும். 

அவன் தேர்மணி ஒலி கேட்கிறது. 
நள்ளிரவில் வருகிறான். 
பருத்த அடி கொண்ட புன்னைமரம் இருக்கும் நம் தெருவுக்கு வருவான். 

என்ன செய்யலாம். – இவ்வாறு தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – நெய்தல்

இருங் கழி பொருத ஈர வெண் மணல்
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன் நாம் வெங் கேண்மை
ஐது ஏய்ந்தில்லா ஊங்கும் நம்மொடு
புணர்ந்தனன் போல உணரக் கூறி
தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை
யான் எழில் அறிதலும் உரியள் நீயும் நம்
பராரைப் புன்னைச் சேரி மெல்ல
நள்ளென் கங்குலும் வருமரோ
அம்ம வாழி தோழி அவர் தேர் மணிக் குரலே

இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாக தோழி வரைவுகடாயது
நம்பி குட்டுவன்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

அடும்பு மலர் 

No comments:

Post a Comment